ரன்வேயில் பற்றி எரிந்த விமானம்... உயிர் தப்பிய 122 பயணிகள்: சீனாவில் நடந்த அதிசயம்


சீனாவில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென பற்றி எரிந்ததால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, 122 பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.

சீனாவின் சாங்கிங் விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை திபெத் ஏர்லைன்ஸ் விமானம் 113 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முன்பக்கத்தில் தீப் பிடித்து எரிந்தது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த 122 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 122 பேரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

25 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானம் புறப்பட்டபோது ஓடுபாதையில் இருந்து விலகியதால் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தீ பிடித்தற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

x