‘எரிமலை வாயா, ஏலியன் கால் தடமா?’


செவ்வாய் கிரகத்தில் உள்ள ஓர் எரிமலையின் வாய்ப் பகுதியைப் புகைப்படமாக எடுத்திருக்கும் நாசா, அந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதைப் பார்த்த பலரும் பெரும் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் நிலவியல் மற்றும் பருவநிலை குறித்து ஆராய்வதற்காக 2005-ல் விண்ணில் ஏவப்பட்ட ‘மார்ஸ் ரெக்கானசன்ஸ் ஆர்பிட்டர்’ எனும் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உயர் துல்லியம் கொண்ட இமேஜிங் அறிவியல் ஆராய்ச்சி (HiRISE) எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தப் படத்தை நாசா எடுத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நாசா இந்தப் படத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், இணையவாசிகள் பெரும் வியப்படைந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

‘இதைப் பார்க்கும்போது செவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியின் (ஏலியன்) கால் தடம் போல உள்ளது’ என ஒருவர் தெரிவித்திருக்கிறார். இன்னொருவர், ‘கடவுளின் எல்லா படைப்புகளும் அழகை உள்ளடக்கியவை. அதில் பிரபஞ்சமும் விதிவிலக்கல்ல’ என்று கூறியிருக்கிறார். ‘ஸ்தம்பிக்கவைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது’ என்கிறார் இன்னொரு இணையவாசி.

x