லிவிவ் நகர் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது உக்ரைனியரா?


உக்ரைன் போரின் 31-வது நாளான நேற்று (மார்ச் 26), லிவிவ் நகரின் மீது இரண்டு ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன. ஒரு ராக்கெட் எண்ணெய்க் கிடங்கு மீதும், மற்றொன்று ஒரு வணிகக் கட்டிடம் மீதும் விழுந்தன. இதில் 5 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் நடந்து பல நேரம் வரை அங்கு தீப்பிழம்புகளும் புகைமூட்டமும் இருந்ததை லிவிவ் நகரிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைனியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக லிவிவ் ஆளுநர் மாக்ஸிம் கோஸிட்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

இலக்கின் மீது ராக்கெட் விழுவதை அந்த நபர் காணொலியாகப் பதிவுசெய்ததாக லிவிவ் நகரக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். ராக்கெட் தாக்குதல் தொடர்பான படங்களை இரண்டு ரஷ்ய செல்போன் எண்களுக்கு அவர் அனுப்பியதாகவும் காவல் துறையினர் கண்டறிந்திருக்கின்றனர்.

உக்ரனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றிருக்கும் நிலையில், இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x