உக்ரைன் போர்: ஐரோப்பியாவில் ஆதரவு திரட்டும் அமெரிக்க அதிபர்


அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

நேட்டோ தலைமையகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் சென்றடைந்தார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது, ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளை அணிதிரட்டுவது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

ஜி-7 உச்சி மாநாடு, ஐரோப்பிய ஒன்றிய மாநாடு உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளும் பைடன், நாளை உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்குச் செல்கிறார்.

உக்ரைனுக்கு ஆதரவாக, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு போர்க் குழுக்களை அனுப்புவது குறித்த ஒப்பந்தத்தில் நேட்டோ உறுப்பு நாடுகள் கையெழுத்திடும் என அதன் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறியிருக்கிறார். ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் முயற்சிகளில் நேட்டோ ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x