`நெருக்கடியில் உதவி செய்தீங்க'- பிரதமர் மோடிக்கு பாக். மாணவி நெகிழ்ச்சி நன்றி


பாகிஸ்தான் மாணவி அஸ்மா ஷஃபிக்

"போரினால் உக்ரைனில் சிக்கி தவித்த என்னை இந்திய பிரதமரும், அதிகாரிகளும் பாதுகாப்பாக மீட்டனர்" என்று பாகிஸ்தான் மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 13வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். போரால் உக்ரைனில் சிக்கி வெளிநாட்டினர் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்தியர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். உள்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவித்து வந்த பாகிஸ்தான் மாணவி ஒருவரை இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்து அந்த மாணவி வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னுடைய பெயர் அஸ்மா ஷஃபிக். எனது நாடு பாகிஸ்தான். இங்கு நிலை மிகவும் நெருக்கடியாக உள்ள நிலையில் பாதுகாப்பாக நான் வெளியேற இந்திய தூதரகம் உதவியுள்ளது. இதற்காக இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் எனது குடும்பத்தினரை சந்திக்க உதவியதற்காக நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

x