போருக்குப் பின்னர் விண்வெளித் திட்டங்கள்: உக்ரைன் அதிபர் நம்பிக்கை!


உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக, உக்ரைனில் இணையத் தொடர்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை அந்நாட்டுக்கு வழங்கிவருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க். இந்நிலையில், எலான் மஸ்க்குடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் ஸெலன்ஸ்கி, “சேதப்படுத்தப்பட்ட நகரங்களுக்காக அடுத்த வாரம், ஸ்டார்லிங்க் அமைப்புகளின் அடுத்த தொகுப்பு எங்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. சாத்தியமுள்ள செயற்கைக்கோள் திட்டங்கள் குறித்து எலான் மஸ்க்குடன் ஆலோசித்தேன். ஆனால், அதுகுறித்து போருக்குப் பின்னர் பேசுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை ரஷ்ய ஹேக்கர்களால் தாக்குதலுக்குள்ளாகலாம் என்றும், உக்ரைன் மக்கள் அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறும் எலான் மஸ்க் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

x