பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வளர்ப்பு மகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி. இவர், இம்ரான் கானை திருமணம் செய்வதற்கு முன்பாக முன்னாள் கணவர் மூலம் பிறந்தவர் மூஸா மேனகா. மூஸா, தனது நண்பர்கள் 2 பேருடன் நேற்றிரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மது விற்பனை செய்வது, மதுபானம் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று இருக்கும் நிலையில், மூஸாவின் காரில் மதுபானம் இருந்ததால் காவல் துறையினர் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். அதே நேரத்தில், மூஸா சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு காரணமாக அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.