அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!


உலகளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.57 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 87,934 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரத்து 9 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் இதுவரை 58 லட்சத்து 55 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 87,934 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 79,622,180 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து 50,405,867 பேர் மீண்டுள்ள அதே நேரத்தில், 28,267,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42,721,845 பேராக உயர்ந்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 509,388 பேராகும். பிரேசிலில் மொத்தம் 27,664,958 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 24,252,534 ஆக உள்ளது.

x