உலக அளவில் கிடுகிடுவென உயர்ந்து வரும் கரோனா பாதிப்பு!


உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.20 கோடியாக அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 58.33 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 லட்சத்து 76 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 7 கோடியே 36 லட்சத்து 67 ஆயிரத்து 911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 33 ஆயிரத்து 903 பேர் உயிரிழந்துள்ளனர். 87,027 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

x