அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்த கரோனா மரணங்கள்!


கரோனா பரிசோதனை

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.35 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,123 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் திடீர் திடீரென பாதிப்பும், மரணங்களும் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வந்தாலும் மறுபக்கம் கரோனா பல வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை கொன்று குவித்து வருகிறது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதன் பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலக அளவில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கரோனாவுக்கு இதுவரை 57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,123 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று கரோனா தொற்று 50 ஆயிரம் என்று இருந்த நிலையில் இன்று லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

இதேபோல், பிரான்சில் 46 ஆயிரம் பேருக்கும், ஜெர்மனியில் 1.38 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 1.71 லட்சம் பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் திடீரென கரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நேற்று ஒரே நாளில் 1,173 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

x