பிரேசில், அமெரிக்காவில் எகிறும் கரோனா பாதிப்பு: ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள்


கரோனா பரிசோதனை

பிரேசில், அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அந்த நாடுகளில் ஒருநாளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.82 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுதும் பரவிவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,82,03,240 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7,48,23,190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பில் இருந்து இதுவரை 30,76,50,558 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இதுவரை 57,29,492 பேர் உயிரிழந்துள்ளனர். 91,777 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,27,783 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,261 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரேநாளில் 1,47,183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,100 பேர் இறந்துள்ளனர். 2,35,100 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,050 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 923 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.

x