உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-ம் இடத்தில் பிரான்சும், 4-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
உலக அளவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், தொற்று பாதிப்பின் வீரியம் தணியவில்லை. தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.68 லட்சமாக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.23 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.22 கோடியாக உள்ளது. இதில் தீவிர பாதிப்புடன் 95,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 4,58,656 பேரும், பிரான்சில் 3.53,503 பேரும், பிரேசிலில் 2,57,239 பேரும், இந்தியாவில் 2,32,142 பேரும், இங்கிலாந்தில் 89,176 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.