7 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு!


கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6,700 வரை விற்பனையாகிறது.

கரோனா பாதிப்பு நாட்டையே அச்சுறுத்தி வரும் நிலையில், அண்மையில், ஈரான் - துருக்கி இடையிலான எண்ணெய் குழாயில் சேதம், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், சர்வதேச விமான நிலையம் அருகே 3 எண்ணெய் டேங்கர்கள் மீது அண்மையில் பயங்கரவாத அமைப்பு நடத்திய வான்வழி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக விலை உயர்வை மேலும் அதிகரிக்க செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் பிரென் கச்சா எண்ணெய் 2% உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.6,700 ஆக உள்ளது. இது 2014-ம் ஆண்டுக்கு பிறகு காணப்பட்ட அதிகபட்ச விலையாகும்.

x