400 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குங்கள்


பசில் ராஜபக்சே

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை, நிதியுதவி வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இலங்கை. இந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் இருந்து இலங்கை கடன் வாங்கி சமாளித்து வருகிறது.

இந்நிலையில், நிதியுதவி வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது இலங்கை. மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் பசில் ராஜபக்சே கோரிக்கை விடுத்திருக்கிறார். ‘சார்க் அமைப்பின் நிதியுதவி திட்டத்தின்கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க இலங்கை அரசுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதநேய அடிப்படையில் இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

x