பூடான் எல்லைக்குட்பட்ட டோக்லாம் பகுதியில் இரண்டு புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளது. இந்த கிராமங்களின் சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இந்தியா- சீனா ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட பூடான், சிக்கிம், திபெத் எல்லைகள் ஒன்றுகூடும் டோக்லாம் பகுதியில் இருந்து 30 கிமீட்டர் தொலைவில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இரண்டு புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு 100 சதுர கிமீட்டர் பரப்பளவில் கிராமங்களை சீனா கட்டமைத்ததாக சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய இரண்டு கிராமங்களை சீனா உருவாக்கி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தின் செயல்பாடு மற்றும் முக்கிய பகுதிகளை தெளிவாக கண்காணிக்கக்கூடிய வகையில் சீனா தனது ராணுவக் கட்டமைப்புகளை நிறுவி வருவதாக கூறப்பட்டுள்ளது.