உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்றிய போலீஸ்


குழந்தையுடன் செல்லும் போலீஸ்

உயிருக்குப் போராடியக் குழந்தையுடன் சாலையில் கதறிக் கொண்டிருந்த தாயாரைப் பார்த்த ரோந்து காவல் துறையினர், நொடிப்பொழுதில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர்.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ளது ஸான் மிகுவல் நகரம். இந்த நகரத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது. சாலையோரத்தில் தாய் ஒருவர், தனது 18 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிருக்குப் போராடிய நிலையில் கதறிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த காவல் துறையினர் தாமதம் செய்யாமல் நொடிப்பொழுதில் குழந்தையை, காரில் ஏற்றிக்கொண்டு முதலுதவி அளித்தபடியே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர், குழந்தை நலமுடன் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

x