ஆங் சான் சூச்சிக்கு ஆயுள் முழுவதும் சிறை?


ராணுவ ஆட்சியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் ஸ்டேட் கவுன்சிலர் ஆங் சான் சூச்சி, தன் வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும் என மியான்மரிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா அபாயத்துக்கு நடுவே, 2020 நவம்பர் மாதம் நடந்த மியான்மரில் தேர்தல் நடந்தது அதில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ - என்எல்டி) கட்சி அபார வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் (யூஎஸ்டிபி) கட்சிக்கு முந்தைய தேர்தலைவிடவும் குறைவான இடங்களே கிடைத்தன. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ராணுவம் முறையிட்டுக்கொண்டிருந்த நிலையில், ராணுவ சதி நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடவிருந்த நாளில் அது ராணுவம், ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்தது.

இந்த ஒரு வழக்கில் 3 வருடச் சிறைத்தண்டனைதான் கிடைக்கும் என்றாலும், மற்ற வழக்குகளில் அவருக்கு விதிக்கப்படும் தண்டனைகள், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்வகையில் அமையும்.

அதன்படி, கடந்த பிப்ரவரி 1-ல், மியான்மரின் ஆட்சிப்பொறுப்பை ராணுவம் கைக்கொண்டது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை ராணுவம் கைதுசெய்து வீட்டுச் சிறையில் அடைத்தது. இப்போதுவரை அவர் எந்த இடத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல் வெளியிடப்படவில்லை. ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆங் சான் சூச்சியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். எனினும், இரும்புக்கரம் கொண்டு அதை ராணுவம் அடக்கியது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 10,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிய வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு 3 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இது தவிர, உரிமம் இல்லாத வாக்கி-டாக்கி வைத்திருந்தது, 2020 தேர்தல் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் நடந்துகொண்டது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக தலைநகர் நேபியேட்டோவில் உள்ள நீதிமன்றத்தில் அவர் அவ்வப்போது ஆஜர்படுத்தப்படுகிறார். நீண்ட நேரம் நடக்கும் வழக்கு விசாரணைகளின் காரணமாக, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என அவரது வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். நவம்பர் 30-ல் நடக்கும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் நுழைய பத்திரிகையாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒரு வழக்கில் 3 வருடச் சிறைத்தண்டனைதான் கிடைக்கும் என்றாலும், மற்ற வழக்குகளில் அவருக்கு விதிக்கப்படும் தண்டனைகள், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்வகையில் அமையும் என்றே கருதப்படுகிறது.

x