அலைகள் ஓய்வதில்லை: பெருந்தொற்றின் 5-வது அலையில் பிரான்ஸ்


5-வது அலையில் பிரான்ஸ்

கரோனா பெருந்தொற்றுப் பரவலின் 5-வது அலை தங்கள் தேசத்தில் தொடங்கியிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கிறது பிரான்ஸ்.

இந்தியாவில் கரோனா பரவல் 2-ம் அலை முடிந்து 3-வதுக்கான சாத்தியங்களை அலசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உலக நாடுகள் அடுத்தடுத்த அலைகளில் மூழ்கி எழுந்து மூச்சுத் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் இதில் முதன்மை வகிக்கின்றன.

அந்த வகையில், பெருந்தொற்றுப் பரவலின் 4-வது அலை ஓய்ந்து, 5-வது அலை பிரான்ஸில் ஆரம்பித்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. ’அருகமை தேசங்களில் கரோனா அலைகள் அடுத்தடுத்து தோன்றுவதால், பிரான்ஸில் கரோனாப் பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருப்பதாக’ காரணமும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளை பரிசீலித்து வரும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸில் உள்ள தடுப்பூசி பெறும் வயது வரம்புக்கு உட்பட்டோரான 60 லட்சம் பேரையும், முழுமையான டோஸ்களை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.

x