ஜப்பானில் குளிர்காலம் வந்தால் பறவைக் காய்ச்சல் பீதியும் சேர்ந்தே வரும். அந்த வகையில், இந்த வருட குளிர்காலத்தின் முதல் பறவைக் காய்ச்சல் அலை அங்கே தொடங்கி உள்ளது.
முட்டையிடும் கோழிகள், கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் என ஜப்பானில் சுமார் 35 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது வடகிழக்கு ஜப்பானில், பிராய்லரில் வளர்க்கப்படும் கோழிகளில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியிலிருந்து, அரை கிமீ வட்டாரத்தில் செயல்படும் பண்ணைகளின் கோழிகள் உடனடியாக கொன்றழிக்கப்பட்டன. அந்த வகையில், முதல்கட்டமாக சுமார் ஒன்றரை லட்சம் கோழிகளும் சில ஆயிரம் வாத்துகளும் அழிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து போர்க்கால நடவடிக்கையாக பறவைக் காய்ச்சல் பரவலை கண்காணிக்கவும், தடுக்கவுமான நடவடிக்கைகளை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது.