மணம் முடித்தார் மலாலா!


கணவருடன் மலாலா

பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளி செல்வதை தடுக்கும் தாலிபான்களின் பிற்போக்கை விமர்சனம் செய்ததற்காக, தாலிபான்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு மலாலா யூசுப்சாய் ஆளானார். அப்போது அவருக்கு வயது 14. தலையில் குண்டுபாய்ந்த மலாலா, இங்கிலாந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட மருத்துவ போராட்டத்தில் உயிர் பிழைத்தார். அதன் பின்னர் இன்னும் வேகமாய், பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைப் போராளியாக புகழ்பெற்றார்.

பெற்றோர் மற்றும் கணவருடன் மலாலா

அமைதிக்கான 2014 நோபெல் பரிசை மலாலா பெற்றபோது, அவருக்கு வயது 17. இந்தியாவின் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளரான கைலாஷ் சத்யார்த்தி உடன் இந்த நோபெல் பரிசை மலாலா பகிர்ந்து கொண்டார்.

தற்போது 24 வயதாகும் மலாலா, இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள அவரது இல்லத்தில் இருவீட்டார் முன்னிலையில் எளிமையாக திருமணம் முடித்திருக்கிறார். இந்திய நேரப்படி நேற்றிரவு தனது திருமண வைபவம் குறித்து, சமூக ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு அறிவித்திருக்கிறார்.

மலாலாவின் கணவராக கரம்பற்றியிருக்கும் அசீர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகியாக இருக்கிறார்.

x