தாலிபான் அரசுக்கு 55% பாகிஸ்தானியர் வரவேற்பு


ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பதை 55% பாகிஸ்தானியர்கள் வரவேற்றுள்ளனர். ‘கேலப் பாகிஸ்தான்’ என்ற அமைப்பு ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 5 வரையில் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவை ‘ஜியோ நியூஸ்’ நிறுவனம் இன்று (செப். 12) வெளியிட்டிருக்கிறது.

கைபர் பக்தூன்வா மாகாணத்தில் வசிப்பவர்களில் 65% பேரும், பலூசிஸ்தானில் 55% பேரும் பஞ்சாப் - சிந்து மாகாணப் பகுதிகளில் 54% பேரும் தாலிபான்கள் ஆட்சியை வரவேற்றுள்ளனர். தாலிபான்களுக்கு வரவேற்பு தெரிவித்திருப்பவர்களில் ஆண்களே அதிகம். குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 68% பேர் தாலிபான்கள் ஆட்சியை வரவேற்கின்றனர். பெண்களில் 36% மட்டும்தான் வரவேற்றனர்.

டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடும் ஆப்கானியர்கள்

காபூல் நகரம் தாலிபான்களின் வசம் வந்துவிட்டதைத் தொலைக்காட்சிகள் உறுதி செய்தபோது பாகிஸ்தானின் பல ஊர்களில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். தாலிபான்களின் வெற்றியைவிட அமெரிக்காவின் வெளியேற்றத்தைக் கொண்டாடியவர்களே அதிகம்.

அதேவேளையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசித்துவரும் ஆப்கானியர்கள் தாலிபான்களின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாலிபான்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

x