ஆப்கனிலிருந்து தரைவழியாக வெளியேறிய 4 அமெரிக்கர்கள்


தாலிபான்கள்

ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய பின்னர், அங்கிருந்து முதல் முறையாக 4 அமெரிக்கர்கள் பத்திரமாக வெளியேறியிருக்கிறார்கள்.

நேற்று (செப்டம்பர் 6) ஆப்கனிலிருந்து தரைவழியாக அண்டை நாடு ஒன்றுக்கு அவர்கள் சென்றதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர்களை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், எந்த நாட்டுக்கு அமெரிக்கர்கள் சென்றனர் எனும் தகவல் வெளியிடப்படவில்லை. இந்தத் தகவல் முன்கூட்டியே தாலிபான்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்கள் எவ்விதத்திலும் அதை எதிர்க்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் இறுதியிலேயே. ஆப்கனிலிருந்து அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக 100-க்கும் மேற்பட்டோர் அங்கு இன்னமும் தங்கியிருக்கிறார்கள். அவர்களும் இன்னும் சில நாட்களில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கத்தார் நாட்டுக்குச் சென்றிருக்கும் நிலையில், இந்த வெளியேற்றம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

x