செல்லப் பிராணிகள் சேஃப்!


பால் பென் ஃபார்திங்

ஆப்கானிஸ்தானிலிருந்து கனத்த மனதுடன் மனிதர்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் சூழலில், ஏராளமான செல்லப் பிராணிகளும் அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. அந்த வகையில், காபூலிலிருந்து பிரிட்டனுக்கு 150-க்கும் மேற்பட்ட நாய்களும் பூனைகளும் தனிவிமானத்தில் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன.

பிரிட்டனுக்குக் கொண்டுசெல்லப்படும் விலங்குகளின் உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். விலங்குகளுக்கான கடவுச்சீட்டான ‘பெட் பாஸ்போர்ட்’ பெறப்பட்டிருக்க வேண்டும். ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் எனப் பல்வேறு விதிகள் உண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, காபூலிலிருந்து கொண்டு செல்லப்பட்ட செல்லப் பிராணிகள் 4 மாதங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.

பிரிட்டன் கப்பல் படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பால் பென் ஃபார்திங் நடத்திவரும். ‘நவ்ஸாத்’ பிராணிகள் அறக்கட்டளை இந்தப் பணிகளைச் செய்துவருகிறது. செல்லப் பிராணிகளை பென் ஃபார்திங்கே பத்திரமாக லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதேநேரம் இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஆப்கனில் கையறு நிலையில் தவிக்கவிடப்பட்டிருப்பதாக பிரிட்டனில் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. “மனிதர்களைவிட விலங்குகள் முக்கியமானவையா?” எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

எனினும், விலங்குகளை விமானத்தில் அனுப்பிவைக்கும் பணிகளைச் செய்த ‘நவ்ஸாத்’ அறக்கட்டளை ஊழியர்களுக்கு, ஆப்கனிலிருந்து வெளியேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். அறக்கட்டளையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையறு நிலையில் தவிக்கவிடப்பட்டிருப்பதாக பிரிட்டனில் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. “மனிதர்களைவிட விலங்குகள் முக்கியமானவையா?” எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இதை முன்வைத்து, பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது பணிகளுக்கு இடையூறு செய்ததாக ஃபார்திங் குற்றம்சாட்டியிருப்பது தனிக்கதை!

விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அறக்கட்டளை ஊழியர்களை அழைத்துவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஃபார்திங் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான பணிகள் எப்போது தொடங்கும் என உறுதியான தகவல்கள் இல்லை!

x