எச்சரித்த ஜோ பைடனுக்கு எதிர் தாக்குதல் மூலம் பதில் அளித்த தீவிரவாதிகள்


காபூலில் நடந்த குண்டு வெடிப்பு

ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று விமான நிலையம் பகுதியில் தீவிரவாதிகளால் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கான் தலைநகர் காபூலில் கடந்த 26-ம் தேதியன்று விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள வணிக வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டது.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட இத்தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 150 -க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

அவர் எச்சரித்தவாறே 28-ம் தேதியன்று ட்ரோன் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி, தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த முக்கியத் தீவிரவாதிகள் 2 பேரை கொன்றது அமெரிக்கா. இதன் தொடர்ச்சியாக காபூல் விமான நிலையத்தில் அடுத்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

ஆப்கன் விமான நிலையம் பகுதி முழுவதும் கிட்டத்தட்ட தாலிபான் வசம் வந்துவிட்ட நிலையில் அப்பகுதியில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அதனால் அங்குள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறும்படி காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவை முந்திக் கொண்ட தீவிரவாதிகள் இன்று 29 -ம் தேதி மாலையில் காபூலில் விமான நிலையம் பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில்...

அமெரிக்காவின எச்சரிக்கைக்கு பதிலடி தரும் விதமாக எதிர் தாக்குதல் நடத்தி

இருக்கிறார்கள் தீவிரவாதிகள். இதற்கும் தக்க பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

x