பெண்கள் வாக்குரிமைக்கு வயது 125!


இன்று பல நாடுகளில் பெண்கள் பிரதமர்களாகவும் அதிபர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் 125 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டுமல்ல, தேர்தலில் வாக்களிக்கவும் தடை இருந்தது.

19-ம் நூற்றாண்டில் பல்வேறு ஐரோப்பிய காலனி நாடுகளைப் போலவே நியூசிலாந்திலும் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்துப் பெண்கள் போராடத் தொடங்கினர்.

‘பெண்கள் வாக்குரிமை இயக்கம்’ என்றழைக்கப்பட்ட இந்தப் போராட்ட இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த கேட் ஷெப்பர்ட், மேரி ஆன் முல்லர்
இருவரும் இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தவர்கள். கேட் ஷெப்பர்ட், மதுப்பழக்கத்துக்கு எதிரான கிறிஸ்தவப் பெண்கள் சங்கம் (Women’s Christian Temprance Union) என்ற அமைப்பின் நியூசிலாந்து கிளையின் உறுப்பினர். மது எதிர்ப்பு மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஆதரவான பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பும் பெண்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றியது.

பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டம் பல ஆண்டுகள் நடந்தது. 1891, 1892, 1893 ஆண்டுகளில் முறையே 9000, 20,000, 32,000 பெண்களின் கையெழுத்துடன் 18
வயதைக் கடந்த அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமைகோரும் மனுக்கள் நியூசிலாந்து நாடாளுமன்றத்திடம் அளிக்கப்பட்டன. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதாவை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சி 1887 தொடங்கி பலமுறை தோற்கடிக்கப்பட்டது.

x