தொடரட்டும் இந்த அமைதிப் புரட்சி!


உலக அளவில் இதுவரையிலும் பிரிந்த நாடுகள் மீண்டும் நட்பு பாராட்டுவது என்பது மிகவும் அரிதான விஷயமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட ஆச்சரியம் கொரிய தீபகற்பத்தில் நடந்துகொண்டிருக்கிறது. 

இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொரிய தீபகற்பம், வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளாகப் பிரிந்தது. இரு நாடுகளுக்கிடையே 1950-53-ல் நடந்த போருக்குப் பிறகு லட்சக்கணக்கான உறவினர்களும், நண்பர்களும் பிரிக்கப்பட்டனர். அதன்பிறகு பிற நாடுகளோடு கொரிய நாடுகள் பெரிய அளவில் நட்பு பாராட்டாமலே இருந்துவந்தன. அதிலும் வட கொரியாவின் அதிபராக கிம் பொறுப்பேற்றதிலிருந்து உலக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். அமெரிக்காவுக்கு எதிராகப் பல நாடுகள் மூச்சுக்கூட விடாமல் இருந்த நிலையில், அமெரிக்காவை அழித்துவிடுவேன் என்று சவால் விட்டார். 

இப்படி சில மாதங்களுக்கு முன்வரையிலும் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்தவர், எங்கு போய் ஞானத்தைப் பெற்றாரோ திடீரென்று அமைதியின் மறு உருவமாகவே மாறிப்போனார். ஆனானப்பட்ட ட்ரம்பிடமே அமைதி உடன்படிக்கை செய்துகொண்டு, அணு ஆயுத நடவடிக்கைகளைக் கைவிடுவதாகக் கூறினார். அதே
சமயம், இரண்டாகப் பிரிந்த கொரிய நாடுகள் மீண்டும் நட்புறவுடன் இருப்பதற்கான முயற் சியிலும் இறங்கினார். இருநாட்டுத் தலைவர் களும் சந்தித்துக்கொள்ள ஆரம்பித்த நாளிலிருந்து அவ்விரு நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து இனிப்பான செய்திகள் வந்தவண்ணம் இருக் கின்றன. 

வட கொரியா - தென் கொரியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கசப்புணர்வு தற்போது படிப்படி யாகக் குறைந்துவருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே யான பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப் பட்டுவருகின்றன. இந்நிலையில், தற்போது வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை மூடுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. தொடர்ந்து படிப்படியாக பரஸ்பரம் ராணுவ செயல்பாடுகளும் வாபஸ் பெறப்பட உள்ளன. முக்கியமாக, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிந்த தங்கள் உறவினர்களை மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணத்தையும் கொரிய தீபகற்பத்து மக்களுக்கு இருநாட்டுத் தலைவர்களும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். 

x