குழந்தைகளை இப்படி கொடுமைப்படுத்தலாமா?


சட்ட விரோதமாகக் குடியேறிய  குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்துக் கம்பி வேலிக் கூடாரங்களில் அடைத்துள்ளது அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கை குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை நேரடியாகத் தண்டிக்க முடியாது என்பதால், பெற்றோரை மட்டும் பல்வேறு இடங்களில் உள்ள சிறைகளில் அடைத்துவருகிறது அமெரிக்க அரசு. குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் குடியேற்ற அலுவலகங்களில் உள்ள கூடாரங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஏப்ரல் 19 முதல் மே 31 வரை மட்டும் 1,940 பேர் எல்லைக் காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுடைய 1,995 குழந்தைகள் அகதிகள் கூடாரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரேகான் மாகாணத்தில் உள்ள சிறைகளில், கடந்த மாதம் மட்டும் 123 தெற்காசியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள்.

தாய், தந்தையரைப் பிரிந்த குழந்தைகள் இரும்பு வேலி கூடாரங்களுக்குள் இருந்து “அப்பா... அம்மா” என்று கதறி அழும் ஆடியோ துணுக்குகள் வெளியாகி உலக மக்களின் மனங்களை உலுக்கின.

x