இயற்கை நேசர்களுக்கு மரணப் பரிசு
தேவசேனா
இயற்கை, நாளுக்கு நாள் சுரண்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இருக்கும் கொஞ்சநஞ்ச வளங்களைப் பாதுகாக்க முன்வருபவர்களையும் லாபத்துக்காக இயற் கையைச் சுரண்டும் தொழில் நிறுவனங்கள் கொன்று குவிக் கின்றன. இதைத் தடுக்க வேண்டிய அரசுகளும் அதற்கு ஆதரவாகவோ கண்டும் காணாமலோ இருக்கின்றன.
காங்கோ ஜனநாயக குடியரசின் வனப் பாதுகாவலர்களிலிருந்து பிரேசிலின் உள்நாட்டு நில உரிமைப் போராளிகள் வரை உலகம் முழுவதும் பல்வேறு சூழலியல் போராளிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தின் தி கார்டியன் செய்தி நிறுவனம் இந்தக் கொலைகளைக் கணக்கெடுத்து வருகிறது. 2015-லிருந்து இந்தக் கொலை கள் அதிகரித்திருப்பதாகச் சொல்லும் கார்டியன், 2018-ல் மட்டுமே உலக அளவில் இதுவரை 50 பேர் கொல்லப் பட்டுள்ளனர் என்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் கார்டியன் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். சில சமீபத்திய சர்வதேச உதாரணங்களையும் பார்க்கலாம்.