எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததால், வெனிசுலா மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் நிக்கோலஸ் மதுரோ இரண்டாவது முறையாக அதிபராகியிருக்கிறார்!
எண்ணெய் வளம் மிகுந்த நாடான வெனிசுலா ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவே இருந்தது. ஆனால் 2013-ல், புற்றுநோயினால் அதிபர் ஹூகோ சாவேஸ் இறந்தபிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. சாவேஸின் அதிபர் பதவியை ஒரு காலத்தில் பேருந்து ஓட்டுநராக இருந்த நிக்கோலஸ் மதுரோ கைப்பற்றினார்.
மதுரோ அதிபரானதிலிருந்து வெனிசுலாவுக்குப் பிரச்சினை மேல் பிரச்சினை. தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் உற்பத்தி குறைந்தது, நாட்டின் எண்ணெய் வளமும் அதன் விளைவாக ஒட்டுமொத்தப். பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தன. பணவீக்கம் அதிகரித்தது. மக்கள் ஒருவேளை உணவுக்காகப் போராடுகின்றனர். அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையும் பூதாகரமாகி வருகிறது. சாவேஸ் அதிபராக இருந்தபோது, தரமான மருத்துவம் கிடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தினார். இப்போது அதுவும் இல்லை. நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதால், மதுரோவின் செல்வாக்கு மக்களிடையே குறைந்து வருகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமாகி தினமும் மக்கள் கொத்துக் கொத்தாக அண்டை நாடுகளில் அகதிகளாகக் குடியேறி வருகின்றனர்.
இந்தச் சூழலில் வெனிசுலாவின் அதிபர் தேர்தல் மே 20-ல் நடந்தது. அரசுக்கு எதிராகப் பேரணி நடத்தியதற்காகத் முக்கிய எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டன. அக்கட்சிகளின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் இதையெல்லாம் மீறி ஹென்றி