கான் விழாவில் பெண்ணுரிமை கோஷம்


பிரான்ஸில் கான் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. உலகம் முழுவதுமிருந்த வந்திருந்த திரைத்துறை பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது திடீரென எழுந்த 82 பெண் திரைப் பிரபலங்கள் ஒன்றுகூடி விழா அரங்கத்துக்கு வெளியே இருந்த படிக்கட்டுகளில் ஏறி சமத்துவ கோஷம் எழுப்பினர். “உலகில் பெண்கள் சிறுபான்மையினர் இல்லை. ஆனால், திரைத் துறையில் சிறுபான்மையினராகவே நடத்தப்படுகிறோம். இதை மாற்றுவதற்கும் முன்னேறுவதற்குமான எங்கள் உறுதியைக் காட்டவே இந்தப் படிகளில் ஒன்று கூடியிருக்கிறோம். திரைத்துறை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர். கான் திரைப்பட விழாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை திரையிடப்பட்ட படங்களில் 82 மட்டுமே பெண்கள் இயக்கியவை. இதிலிருந்து இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

வெனிசுலாவைவிட்டு வெளியேறும் கர்ப்பிணிகள்

வெனிசுலாவிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. வெனிசுலாவில் உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணம். வெனிசுலாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அங்குள்ள மக்களில் பலருக்கு தினமும் ஒருவேளை உணவுதான் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மக்கள், குறிப்பாக பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் வெனிசுலாவிலிருந்து பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். பிரேசிலுக்கு மட்டும் தினமும் 800 பேர் வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இப்படி வருபவர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்களில் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெனிசுலா அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மாற்றம் வருமா?

சீனாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க நிறுவனம்

x