பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியா


சகிப்புத்தன்மைப் பயிற்சி

அமெரிக்காவில் நிறவெறி வன்முறை மீண்டும் தலை தூக்கிவருகிறது. பிரபல காபி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’ ஊழியர்களும் நிறவெறிச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்து அந்நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இதனால், அமெரிக்காவில் உள்ள 8,000 தற்காலிக விற்பனை நிலையங் கள் அனைத்தும் மே 29-ம் தேதி மதியம் மூடப்படும் என்றும் அன்றைய தினம்  ‘ஸ்டார்பக்ஸ்’ காபி நிறுவன ஊழியர் களுக்கு இன சகிப்புத்தன்மை பயிற்சியளிக் கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ. இந்தப் பயிற்சியில் மொத்தம் 1,75,000 ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். மனிதர்களின் அடிப்படை குணநலன்களில் ஒன்றாக இருக்க வேண்டிய சகிப்புத்தன்மையை, பயிற்சி யாளர்களைக் கொண்டு கற்றுத் தர வேண்டிய நிலைக்கு ‘நாகரிக மனிதர்கள்’ வந்திருப்பதை என்னவென்று சொல்வது?

பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியா

x