இந்த ஆண்டின் புகைப்படங்களுக்கான ‘புலிட்சர் விருது’, ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பௌத்தப் பேரினவாதிகள் நிகழ்த்தும் வன்முறை, தாங்கமுடியாத மனிதப் பேரவலங்களுள் ஒன்று. குழந்தைகளும் பெண் களும்கூட கொன்றுகு விக்கப்பட்டனர். அமைதிக்காக ‘நோபல் பரிசு’ பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சி அதிகாரத்தில் இருந்தும், இப்பிரச்சினையில் அவர் அமைதி காத்தது இன்னும் கொடுமை.
இதன் விளைவாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழத் தகுதியற்ற இடமாக மியான்மர் மாறியது. உயிர் தப்புவதற்காக, அவர்கள் நஃப் நதி வழியாக எல்லைதாண்டி, வங்கதேசத்துக் குள் குடியேறுவது அதிகரித்தது.
அதுவும் அவ்வளவு எளிதாக நடந்திடவில்லை. நதியில் படகு கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். வன்முறைகளில் சிக்கி உயிரிழப்பவர்களைக் காட்டிலும் மியான்மரிலிருந்து தப்பிக்க முயன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.