இங்கிலாந்தின் மனித நேயம்!
ஒரு பாவமும் அறியாத அகதிகளையே வதைக்கும் நாடுகளுக்கு மத்தியில், திட்டமிட்டு சட்டவிரோதமாகத் தங்கியவர்களிடமே மனிதநேயத்துடன் நடந்திருக்கிறது இங்கிலாந்து. ஆப்பிரிக்காவில் இருந்து, விடுமுறைக்காக லண்டன் வந்திருந்த தம்பதியர் சட்டவிரோதமாக அங்கேயே தங்கிவிட்டார்கள். விசா காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கண்டுபிடித்தது அந்நாட்டு அரசு. இதற்கிடையே அந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறந்து மூத்தவனுக்கு 7 வயதும், இளையவளுக்கு 1 வயதும் ஆகிவிட்டது. கணவரும் ஏதோ வன்முறை வழக்கில் சிக்கி சிறைக்குப் போய்விட்டார். வாழ்வாதாரத்துக்காக லண்டனிலேயே தங்கத் திட்டமிட்ட தாய், தான்பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகப் பொய் சொல்லியிருந்தார்.
எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டபோதிலும், அரசு அவர்களிடம் கடுமை காட்டவில்லை. தாயையும், குழந்தைகளையும் ஆப்பிரிக்காவுக்கே திருப்பியனுப்பிவிட்ட அரசு, குழந்தைகள் இருவரும் இங்கிலாந்திலேயே பிறந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு 16 வயது வரை வாரம் 300 யூரோ வழங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது.
வீடு திரும்பும் ராணுவ வீரர்கள்!