விடைபெற்றார் வின்னி!


நெல்சன் மண்டேலாவின் மனைவியும் நிறவெறிக்கெதிரான போராளியுமான வின்னி மண்டேலா ஏப்ரல் 2 அன்று மரணமடைந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள சொவட்டோவை நோக்கி, மாபெரும் மக்கள் வெள்ளம் அழுதபடியே படையெடுத்தது. நெல்சன் மண்டேலாவின் மனைவி, வின்னி மடிகிசிலா மண்டேலாவின் இறப்புச் செய்திதான் அதற்குக் காரணம்.

நிறவெறிக்கு எதிராகப் போராடி, தென் ஆப்பிரிக்காவில் மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர், நெல்சன் மண்டேலா என்பது உலகறிந்த விஷயம். ஆனால், அந்தப் போராட்டத்தில், அவருக்கு நிகராக அவரது மனைவி வின்னி மண்டேலாவுக்கும் பங்கிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

1936ல், ஈஸ்டர்ன் கேப்பில் பிறந்த வின்னி தனது எதிர்காலக் கணவர் மண்டேலாவைச் சந்திக்கும் முன்பிருந்தே, கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவந்தார். நெல்சன் மண்டேலாவை மணந்து இரு பெண் பிள்ளைகளைப் பெற்றிருந்த நிலையில், நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கணவரோடு சேர்ந்தே சிறை சென்றார். அந்த வழக்கில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

x