தந்தை மகனுக்குத் தந்த ஆறுதல்


தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியேறினார். விமான நிலையத்தில் அவர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்மித், ஊடகர்களை சந்தித்தபோது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். “ஏதேனும் தவறு செய்யும் முன், உங்களது பெற்றோரை அது எந்த அளவு பாதிக்கும் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்” என்று அழுதுகொண்டே ஸ்மித் சொன்னபோது, அங்கிருந்த அவரது தந்தை பீட்டர் மகனுக்கு அருகில் சென்று ஆறுதல்படுத்தியது உணர்வுபூர்வமான காட்சியாக இருந்தது.

சூழலியல் போராளிகளைக் காப்போம்!

‘கார்டியன்’ இதழ் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்த ஆண்டுமட்டும் உலகெங்கும் 16 சூழலியல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.இவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களையும் அரசுகளையும் எதிர்த்துப் போராடியவர்கள். 2015-லிருந்து பிரேசிலில் 145 பேரும் ஃபிலிப்பைன்ஸில் 102 பேரும் சூழலியல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது பிலிப்பைன்ஸ். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் சூழலியல் போராளிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறும் இந்த ஆய்வு, உலக அளவில் அதிகபட்சமாக 2016-ல், 201 போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.

தாய் மண்ணில் மலாலா!

x