புத்தக வெடிகுண்டின் 50 ஆண்டுகள்!


உயிரியலாளர் பால் எல்ரிக் போட்ட வெடிகுண்டுக்கு இது 50-வது ஆண்டு. ‘மக்கள்தொகை வெடிகுண்டு’ (பாப்புலேஷன் பாம்) என்ற அவரது புத்தகம் 1968-ல் வெளியானபோது உலக நாடுகள் அனைத்தும் அதிர்ந்து போயின.

உலக மக்கள்தொகை 200 கோடியைத் தாண்டினால் மனித குலம் பஞ்சம், பட்டினியால் பீடிக்கப்பட்டு அழிய நேரிடும் என்று அந்தப் புத்தகத்தில் எச்சரித்திருந்தார் அவர்.

அவர் எச்சரித்தது முழுதாகப் பலிக்கவில்லை என்றாலும் அதுதான் பல நாடுகளிலும் பஞ்சத் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. ஐம்பது ஆண்டுகள் கழித்துத் தன் கருத்தில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார் எல்ரிக். “வளர்ச்சி, மேலும் மேலும் வளர்ச்சி என்பதை மனிதர்கள் தங்களின் பொருளாதார, அரசியல் இலக்காகக் கொண்டிருக்கும்வரை உலகப் பேரழிவுக்கான அபாயம் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.

அளவுக்கதிகமான பணக்காரர்கள் இருப்பதென்பது மனித குலத்தின் எதிர்காலத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்” என்கிறார் எல்ரிக்!

x