சமூகத்தோடு கை கோத்திடு!


இங்கிலாந்தின் ‘கார்டியன்’ நாளிதழ் மற்றுமொரு புதுமை புரிந்திருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் பார்க்லேண்ட் நகரத்தின் பள்ளியொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டனர், பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில், படுகொலை சம்பவம் நடந்த பள்ளி மாணவர்களைக் கவுரவ ஆசிரியர்களாக இருக்குமாறு ‘கார்டியன்’ இதழ் அழைத்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை, 24-ம் தேதியன்று அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிராக நடைபெற்ற ‘நம் உயிரைக் காத்துக்கொள்வதற்கான அணிவகுப்பு’ (மார்ச் ஃபார் அவர் லைஃப்) தொடர்பான செய்திகள், கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றுக்கு அந்த மாணவர்கள் ‘எடிட்டர்’களாக இருக்கிறார்கள்

x