நானே மக்கள், நானே ராஜா!


ஊழல் ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளால் உலக கவனத்தை ஈர்த்துவருபவர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான். அண்மையில் அவர் ரூ.1,900 கோடி மதிப்புள்ள பிரெஞ்சு மாளிகையை வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்த விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள சல்மான், “எளிமையாக வாழ, நான் காந்தியோ மண்டேலாவோ அல்ல. நூறாண்டுகளாக நீளும் அரச வம்சத்தைச் சேர்ந்தவன். என் செல்வந்த வாழ்க்கை என் தனிப்பட்ட விஷயம். எனது வருமானத்தில் 49%-ஐ எனக்குச் செலவிட்டுக்கொள்ளும் நான், 51%-ஐ மக்களுக்குச் செலவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்!

x