பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் (செனட்) எதிர்கட்சி தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தேர்வாகியிருக்கிறார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஷெரி ரஹ்மான்! பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனாசிர் புட்டோவும் இதே கட்சியைச் சேர்ந்தவர்தான்.
இந்த மாதம், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவுடன் முதல்முறையாக இந்து தலித் பெண்ணான கிருஷ்ண குமாரி கோலி, செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் நினைவுகூரத்தக்கது.