எகிப்தியர்களால் புனிதமானதாகக் கருதப்படும் நைல் நதியை அவமதித்தார் என்று 6 மாதச் சிறை தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் அந்நாட்டின் பிரபல மேடைப் பாடகர் ஷெரின் அப்தெல் வஹாப்.
கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் ‘ஹேவ் யூ ட்ரங் ஃப்ரம் நைல்’ என்கிற பாடலைப் பாடச் சொன்னார். அதற்கு ‘நைல் நீரைக் குடித்தால் பில்ஹர்ஸிய நோய்த் தாக்குதலுக்கு ஆளாவோம்’ என்று ஜோக் அடித்ததுதான் ஷெரின் செய்ய குற்றமாம்!