நீளும் கொடும் கை!


சீனாவை உலகின் பேரரசாக்கும் முழக்கத்தோடு அரியணை ஏறிய ஜீ ஜின்பிங், உலகின் பேரதிகார மையமாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் முயற்சியில் உச்சம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீன மக்கள் குடியரசின் தலைவர், சீன ராணுவ ஆணையத்தின் தலைவர் என்று 15-க்கும் மேற்பட்ட பதவிகளை வகிக்கும் அவர் ஏற்கெனவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கும் வகையில் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் புதிய திருத்தத்தின்படி, ‘சீன அதிபர் பதவியை ஒருவர் இரு முறைதான் வகிக்கலாம்’ என்பது நீக்கப்பட்டுவிட்டது.

அதாவது, இனி அவருடைய வாழ்நாள் முழுக்க அவர் அதிபராக நீடிக்க எந்தத் தடையும் இல்லை. அரசின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி மக்களின் எதிர்ப்பனல் சமூக வலைதளங்களின் வழி கொந்தளிக்க தொடங்கியிருக்கிறது! 

x