வாலிபாலில் தோற்றதால் தண்டால் எடுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!


பல்லடத்தில் வாலிபால் விளையாட்டில் தோற்றதால் தனது அணி வீரர்களுடன் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தண்டால் எடுத்தார்.

திருப்பூர்: வாலிபால் விளையாடி தோற்றதால், தண்டால் எடுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்லடம் வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பல்லடம் வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்லடம் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் விடுதியின் அடிப்படை தேவை குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து மாணவர்களுடன் வாலிபால் விளையாடினார். அப்பொழுது விளையாட்டில் தோற்கும் அணியினர் 10 முறை தண்டால் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்து, விளையாடினர். இதில் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜின் அணி தோற்கவே மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தனது அணி மாணவர்களுடன் சேர்ந்து தண்டால் எடுத்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x