வாலிபால் போட்டியில் தனது அணி வெற்றி - உற்சாகத்தில் புதுச்சேரி பாஜக எம்எல்ஏ நடனம்!


புதுச்சேரி: வாலிபால் போட்டியில் தனது அணி வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்த, புதுச்சேரி பாஜக எம்எல்ஏ நடனமாடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி ஸ்பைடர் விளையாட்டுக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில அளவிலான ஆடவர்களுக்கான 45ம் ஆண்டு வாலிபால் போட்டிகள் கருவடிக்குப்பம் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் ஸ்பைடர் மற்றும் சுதந்திர பறவை அணிகள் மோதியது.

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ-வான கல்யாண சுந்தரத்தின் அணியான ஸ்பைடர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, வெற்றிக் கோப்பையுடன் அவர் தனது அணி வீரர்களுடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தனது அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், பாஜக எம்எல்ஏ நடனம் ஆடியதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

x