வாட்டும் வெப்ப அலை: ராஜஸ்தான் பாலைவன மணலில் அப்பளம் சுட்ட பிஎஸ்எஃப் வீரர்!


வடமாநிலங்களில் வெப்பம் வாட்டி வருகிறது. ராஜஸ்தானில் வெப்பம் 45 டிகிரி செல்சியஸுக்கு அனலாய் கொதித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் (பிஎஸ்எஃப்) பிகானேர் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் மணல் பரப்பில் அப்பளம் சுட்டு வெப்பத்தின் தீவிரத்தை நிரூபிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர், சுட்டெரிக்கும் மணல் பரப்பில் அப்பளம் ஒன்றை புதைத்து வைக்கிறார். ஒரு சில நொடிகளில் அந்த அப்பளத்தை எடுக்கிறார். அந்த அப்பளம், அந்தப் பகுதியில் நிலவும் மிகைவெப்பத்தை நிரூபிக்கும் விதமகா மிகச் சரியான பதத்தில் மொறு மொறுப்பாக பொரிந்து போய் இருக்கிறது.

அந்த வீடியோவில் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், வெப்பம் 47 டிகிரி செல்சியஸ் நிலவும் ராஸ்தானின் பிகானோர் எல்லைப் பகுதியில் சுடும் மணலில் அப்பளம் பொரிக்கிறார்" என்று எழுத்தப்பட்டுள்ளது.

வட மாநிலங்கள் தொடர்ந்து கடும் வெப்பத்தால் வாடுகிறது. டெல்லி, ராஜஸ்தானின் சில பகுதிகள், பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இப்பகுதிகளில் உயர்ந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 47 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"மாநிலங்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. உச்சபட்ட வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், அது மேலும் உயர்ந்து 47 டிகிரி செல்சியல் வரை உயரலாம்" என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் தெரிவித்தார்.

x