கறுப்பினப் பெண்ணை அவமானப்படுத்திய ஜோ பைடன்... வைரலாகும் வீடியோ!


ஜோ பைடன் புறக்கணிப்பால் வேதனையோடு காட்சியளிக்கும் கறுப்பின பெண்.

வரவேற்க காத்திருந்த கறுப்பினப் பெண்ணை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவமானப்படுத்தியதாக வேகமாக பரவும் வீடியோவால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகத்தின் பல நாடுகளில் கறுப்பின மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாடு தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மனிதர்களே இப்படியான பாகுபாட்டில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கறுப்பின அமெரிக்க பெண்ணை புறக்கணித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மேடிசன் நகரில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அவர் மக்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ​​தனக்காக ஆவலுடன் காத்திருந்த கறுப்பின அமெரிக்கப் பெண்ணை பைடன் புறக்கணித்தார். இந்த சம்பவத்தின் வீடியோவை ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியினர் வேகமாக வைரலாக்கி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், ஒரு இளம் கறுப்பின அமெரிக்கப் பெண் ஒரு போர்டைப் பிடித்துக் கொண்டு பைடைனை வரவேற்கக் காத்திருக்கிறார். ஆனால் அமெரிக்க அதிபர் பைடன் அந்த பெண்ணைப் புறக்கணித்து விட்டு. தன் முன் நின்றிருந்த வெள்ளைக்காரப் பெண்களை அணைத்துவிட்டு, கறுப்பின பெண்ணை விட்டு விட்டு அவருக்குப் பின்னால் நின்றிருந்த இன்னொரு வெள்ளைக்காரப் பெண்ணை அணைத்துக் கொள்கிறார்.

இதைப் பார்த்த கறுப்பின பெண் முகத்தில் விரக்தி பரவுகிறது. வைரலாகும் இந்த வீடியோ அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடனின் பிரச்சாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x