‘ஒர்க் ஃப்ரம் ட்ராஃபிக்’ - வைரலாகி வரும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலின் புதிய முகம்


பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலில் தனது இருசக்கர வாகனத்தில் காத்திருக்கும் பெண் ஒருவர், வாகனத்தில் அமர்ந்தபடி வீடியோ கால் பேசும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்வாட்கேட் என்ற எக்ஸ் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள 22 விநாடி ஓடக் கூடிய அந்த வீடியோவில், "ஒர்க் ஃப்ரம் ட்ராஃபிக். பெங்களூருவின் மற்றொரு சாதாரணமான நாள்" என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், போக்குவரத்து நெரிசலில் பெண் ஒருவர் தனது இருக்கர வாகனத்தில் காத்திருக்கிறார். அப்போது வண்டியின் இடது கண்ணாடியில் இருக்கும் செல்போன் தாங்கியில் வைக்கப்பட்டிருக்கும் போனில் வீடியோ அழைப்பில் பேசுகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்து, "வேறு யாரையும் போல் இல்லாமல் பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் வேலை செய்யும் புதிய கலாச்சாரத்தை ஊக்குவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பலரை மகிழ்விக்கவில்லை. பயனர்கள் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமமாக பாவிக்கத் தெரியாத பணியாளர்களின் இயலாமை குறித்து விவாதிக்கின்றனர். லோகேஷ் நாயக் என்ற பயனர், "சமரசம் செய்துகொள்வதை அறிந்திருப்பதால் இந்தியர்கள் எளிதாக சுரண்டப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அவினேஷ் என்ற பயனர், "இது பணியித்து நெகிழ்வுத்தன்மை என்று அழைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்வாட்கேட், " வேலை வாழ்க்கை சமமின்மை என அழைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதுபோன்ற நிகழ்வொன்று நடந்தது. காலாணி கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர், தனது லேப்டாப்பில் அலுவலக டீம் மீட்டிங்க்-ல் பங்கேற்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.