சென்னை: பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என அமித்ஷாவும் கூறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
இன்று சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘ திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அது யார்..யார் என்பதை இப்போது கூற முடியாது.
அதுபோல தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என அமித்ஷாவும் கூறவில்லை. அவர் டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்