பென்சில் கேட்டதில் தகராறு: நெல்லையில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்!


திருநெல்வேலி: பென்சில் கேட்ட தகராறில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், தன்னுடன் பயிலும் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பாளையங்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில், இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் திடீரென அரிவாளை எடுத்து, சக மாணவனை வெட்டியதாகவும், இதை தடுக்க வந்த ஆசிரியருக்கும் அறிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரு மாணவர்கள் இடையே ஒரு மாதத்துக்கு முன்பு பென்சில் கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தன் பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை வெட்டியுள்ளார். இதனை தடுக்க முற்பட்ட ஆசிரியைக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் காயமடைந்த மாணவன் மற்றும் ஆசிரியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டிய மாணவனை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x