புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கே.எஸ்.முகமது கனி. இவர், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகரச் செயலாளராக இருந்தார் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.விஜயபாஸ்கருக்கு அனுப்பி உள்ளார்.
இது குறித்து முகமது கனி கூறியது: 1989-ல் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறேன். தற்போது, சிறு பான்மையினர் பிரிவில் ஆலங்குடி நகரச் செயலாளராக இருந்தேன். அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததுடன். தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.