விருதுநகரில் 9 ஆய்வாளர்கள், 7 சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு


விருதுநகர் மாவட்டத்தில் 9 ஆய்வாளர்கள், 7 சார்பு ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சேத்தூருக்கும், வச்சக்காரப்பட்டி ஆய்வாளர் பொன்மீனா மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கும், சைபர் கிரைம் ஆய்வாளர் மீனா விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திருநெல்வேலி தனிப் பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய ஆய்வாளர் செல்வி விருதுநகர் மேற்கு காவல் நிலைய குற்றப் பிரிவுக்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, சிவகாசி கிழக்கு சார்பு ஆய்வாளர் பாண்டியன் வத்திராயிருப்புக்கும், வத்திராயிருப்பு சார்பு ஆய்வாளர் விஜய சண்மு நாதன் சிவகாசி கிழக்குக்கும், வன்னியம்பட்டி சார்பு ஆய்வாளர் சுந்தர் ராஜன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கும், சூலக்கரை சார்பு ஆய்வாளர் கார்த்திகா வச்சக்காரப்பட்டிக்கும், வச்சக்காரப்பட்டி சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் சூலக்கரைக்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்த குமார் ஆலங்குளத்துக்கும், ஆலங்குளம் எஸ்.ஐ. சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

x